‘தர்பார் படம் நன்றாக வந்திருக்கிறது’

சினிமா

சென்னை, அக்.4: தர்பார் படம் நன்றாக வந்துள்ளது என சென்னை திரும்பிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறினார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் 18-ந் தேதி தர்பார் படப்பிடிப்புக்காக மும்பை சென்றார். மும்பையில் இறுதி கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டு நேற்று இரவு விமானத்தில் சென்னை வந்தார். அப்போது சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களிடம் கூறுகையில், தர்பார் படம் நன்றாக வந்திருக்கிறது என்றார். மேலும் அவரிடம் டிசம்பர் மாதம் கட்சி தொடங்குவது பற்றியும் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்தும் நிருபர்கள் கேட்டதற்கு பதில் எதுவும் கூறாமல் காரில் ஏறி சென்றார்.