காஞ்சிபுரம்,அக்.4: காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ரத்ததானமுகாமியல் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 200பேர் ரத்ததானம் வழங்கினர். காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் 200 கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை உதவியுடன் ரத்ததானம் முகாம் இன்று நடைபெற்றது. காஞ்சிபுரம் பெரியார் நகர் அருகே உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி ரத்ததான முகாம் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் இக்கல்லூரி வளாகத்தில் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை துணையோடு ரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் 200க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்த தானம் வழங்கினர். ரத்த தானம் வழங்கிய மாணவர்களுக்கு சான்றுதழ் மற்றும் பிஸ்கட் குளிர்பானம் வழங்கப்பட்டன. இதில் கல்லூரியை சேர்ந்த பேராசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டு ரத்த தானம் வழங்கினர். இதில் காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனை மருத்துவர் தாமரைநங்கை, கல்லூரி முதல்வர் பழனிராஜ், பேராசிரியர்கள் சுரேஷ்பாபு மற்றும் ரேணுகாதேவி முன்னாள் பேராசிரியர் பூர்ண் சந்திரன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.