சென்னை, அக்.4: சென்னை தரமணி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் மைதீன் (வயது 45) இவர் பாலவாக்கத்தில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். நேற்று தனது குடும்பத்தினருடன் வெளியே சென்று விட்டு இரவு வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டு வந்த ரூ.15 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 12 சவரன் தங்க நகைகள் ஆகியவை திருட்டுப்போனது தெரியவந்தது.இது தொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில் தரமணி போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.