தாம்பரம், அக்,4: தாம்பரம் அருகே சட்ட விரோதமாக மணல் அள்ளபடுவதாக வந்த புகாரை தொடர்ந்து 300க்கும் மேற்பட்ட லாரிகளை பொது மக்கள் சிறைபிடித்து முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தாம்பரம் அடுத்த முல்லை நகர் பகுதியில் உள்ள புது தாங்கல் ஏரியை தூர் வாருவதற்காக மாவட்ட கலெக்டர் உத்திரவின் பேரில் 60-வது நாட்கள் மணல் அள்ள வேண்டும் என்று ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் சிலர் ஒரே இரவில் இதுவரை 4000 லாரிகளில் எந்த வித அறிவிப்புயின்றி மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாகவும் அள்ளி செல்லும் 2யூனிட் மணலை அரசு நிர்ணயத்தை விலையை விட 4000 ஆயிரம் ரூபாய்க்கு சட்ட விரோதமாக விற்று வருவதாக அப்பகுதி மக்கள் புகார் செய்தனர், இதனை அடுத்து பொதுமக்கள் 100 பேரிடம் சென்று மணல் அள்ளிகொண்டிருந்த லாரிகளை சிறை பிடித்தனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது இதனால் தொடர் தர்ணா போராட்டத்தில் எம்.எல்.ஏவும் ,பொதுமக்களும் ஈடுபட்டு வந்தனர்.இதனையடுத்து அங்கு வந்த தாம்பரம் போலீசார் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். மாலை 6 மணி அளவில் தாம்பரம் கோட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு காவல் துறை ஆதிகாரிகளுடன் வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. அளித்த புகாரின்பேரில் தனியார் ஒப்பந்தாருக்கு அளிக்கபட்டு இருந்த மண் அள்ளும் ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு கலெக்டர் பொன்னையா அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். இதை யடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.