மும்பை, அக்.5: மும்பையில் மெட்ரோ ரெயில் திட்டத்துக்காக 2700 மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருவதால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மும்பை ஆரே காலனி பகுதியில் மெட்ரோ பணிமனை அமைக்க மெட்ரோ ரெயில் கழகம் முடிவு செய்துள்ளது. இதற்காக ஆரேகாலனி வனப்பகுதியில் உள்ள 2 ஆயிரத்து 700 மரங்களை வெட்ட மும்பை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.

இது சமூக ஆர்வலர்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டன இதையடுத்து, மரங்களை வெட்டும் பணி நேற்று இரவு துவங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ஆரே பகுதியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.