சிதம்பரம், அக்.5: சிதம்பரம் நகராட்சியில் தமிழ்நாடு மின்சார வாரியம் அருகில் உள்ள சுமார் 14 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த குளங்களில் ஒன்றான நாகசேரி குளத்தை தூர்வாரும் பணியை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் சுரேந்திர ஷா, கூட்டுறவு சங்கத் தலைவர் சுந்தரமூர்த்தி, மார்க்கெட் நாகராஜன், ஒப்பந்ததாரர் சங்க தலைவர் சண்முகசுந்தரம், ரஜினிகாந்த், கிருஷ்ணமூர்த்தி மற்றும் பொதுமக்கள், நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.