சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன்: ஸ்ருதிஹாசன்

சினிமா

நடிகை, பாடகர், இசை அமைப்பாளர் என பண்முகத்திறமை கொண்ட சுருதிஹாசன் தற்போது இசை நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வருகிறார். சினிமா வாய்ப்புகள் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி; எதைப் பற்றியும் அவர் கவலைப்படுவது இல்லை. கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் தலைகாட்டாமல் ஒதுங்கியிருந்த அவர், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில், ஏராளமான இசை நிகழ்ச்சிகளை, வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார்.

அவரது கைவசம், இன்னும் ஏராளமான இசை நிகழ்ச்சிகள் இருக்கின்றன. எல்லாமே வெளிநாடுகளில் தான் நடக்கவுள்ளன. சற்று இடைவெளிக்கு பின், இந்தியில் ஒரு படத்திலும், தமிழில், விஜய் சேதுபதியுடன் லாபம் என்ற படத்திலும் நடிக்க உள்ளார். அமெரிக்காவின், ‘யு.எஸ்.ஏ., – நெட்ஒர்க்‘ என்ற, ‘டிவி’ சானலில், ‘டிரெட்ஸ்டோன்’ என்ற, சீரியலிலும் நடித்து வருகிறார். ‘இசை மீது எனக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது. எந்த சூழ்நிலையிலும், இசையை கைவிட மாட்டேன். சினிமாவிலும் வாய்ப்பு கிடைக்கும்போது நடிப்பேன்’ என்கிறார்.