சிம்பு நடித்த வாலு, விக்ரம் நடித்த ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கியவர் விஜய் சந்தர். இவர் தற்போது விஜய் சேதுபதியை கதாநாயகனாக வைத்து ‘சங்கத் தமிழன்’ படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். மற்றொரு நாயகியான நிவேதா பெத்துராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் நகைச்சுவை நடிகர் சூரி, மொட்டை ராஜேந்திரன், நாசர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்துக்கு விவேக் – மெர்வின் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வீரம், ஜில்லா ஆகிய படங்களைத் தயாரித்த விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

படம் நிறைவடைந்து இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் தீபாவளிக்கு படம் வெளியாகும் என செய்திகள் வந்த நிலையில், தற்போது அதை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு விஜய் நடிப்பில் வெளியாகும் பிகில் படத்துடன் சங்கத்தமிழனும் வெளியாகிறது. விஜய் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.