புதுடெல்லி, அக். 8: ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை உடனே திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு 250 பிரபலங்கள் கடிதம் எழுதி உள்ளனர்.

பத்திரிகை, கல்வி மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 250 பிரபலங்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு பிரதமர் மோடிக்கு அனுப்பபப்பட்டுள்ளது.

அதில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை ரத்து செய்ததால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இணைய தளம், தொலைத்தொடர்பு வசதி, மனிதனின் அடிப்படை உரிமை எனநீதிமன்றங்கள் சுட்டிக்காட்டி உள்ள போதிலும் இவை அம்மாநில மக்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை என்பதையும் மனுவில் சுட்டிக்காட்டி உள்ளனர்.