உத்தரபிரதேசம், அக்.8:  புரோ கபடி லீக் 2019 தொடரில், தமிழ் தலைவாஸ் அணி நேற்று நடந்த ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் எதிரான போட்டியில் 2 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்து, ஆறுதல் வெற்றியை சுவைத்தது.

உத்தரபிரதேசத்தில் உள்ள ஷாஹித் விஜய் சிங் பதி விளையாட்டு அரங்கில், நேற்றிரவு 8.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில், தமிழ் தலைவாஸ் அணி 35-33 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. நடப்பு புரோ கபடி லீக் தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறிய தமிழ் தலைவாஸ் அணி, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தாலும், இந்த வெற்றியின் மூலம் அந்த அணிக்கு ஆறுதல் கிடைத்துள்ளது.

இதுவரை 21 போட்டிகளில் 14 தோல்விகள், 4 வெற்றி, 3 டிரா என மொத்தம் 31 புள்ளிகள் மட்டுமே தமிழ் தலைவாஸ் அணி பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், டெல்லி தபாங், பெங்கால் வாரியர்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், யு.பி.யோத்தா, யு மும்பா, பெங்களூரு புல்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.