கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த படம் அசுரன்.
இந்தப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடித்துள்ளார். இவர்களுடன் அம்மு அபிராமி, டிஜே அருணாச்சலம், பாலாஜி சக்திவேல், பிரகாஷ்ராஜ், கென் கருணாஸ், பசுபதி, சுப்ரமணியம் சிவா, பவன், ஆடுகளம் நரேன், நித்திஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பும் வசூலும் பெற்று வருகிறது. அசுரன் படத்திற்கு சென்னையில் மட்டுமே ஒரு சில தியேட்டர்களில் காலை 8 மணி சிறப்பு காட்சிகள் இருந்தது. இன்று தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் காலை 8 மணி சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 450 தியேட்டர்களில் சிறப்புக்காட்சிகள் நடைபெற்றது. கர்நாடகாவில் மட்டும் 90 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. மேலும் 5 தியேட்டர்கள் சேர்க்கப்பட்டது.