பிக்பாஸ் டைட்டில் பட்டம் பெற்ற முகேன்

சினிமா

பிக்பாஸ் சீசன்-3 நிகழ்ச்சியின் இறுதி போட்டி 105-வது நாளான கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. இதில் முகேன், சாண்டி, லாஸ்லியா, ஷெரின் ஆகிய 4 பேரும் பைனலுக்கு தேர்வாகினர். கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் முகேன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு நடிகரும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான கமல்ஹாசன் பரிசு கோப்பையையும், ரூ.50 லட்சம் பரிசு தொகையையும் வழங்கினார். முகேன் வெற்றியை அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் அவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் இறுதி வாரத்தில் பதிவான வாக்குகள் முழு விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. மொத்த ஓட்டுகள்: 20 கோடி 53 லட்சம் அதில், முகேன்: 7 கோடி 64 லட்சம் ஓட்டுகள், சாண்டி: 5 கோடி 83 லட்சம் ஓட்டுகள். ஆனால் லாஸ்லியாவுக்கும் ஷெரீனுக்கு சேர்த்து 6 கோடி வாக்குகள் என மிக குறைந்த அளவு வாக்குகள் மட்டுமே வந்துள்ளது.