‘தெறி’, ‘மெர்சல்’ படங்களுக்கு பிறகு விஜய் – அட்லி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் ‘பிகில்’. இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தில் விஜய்யுடன், நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு, சவுந்தரராஜா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் விஜய் அப்பா, மகன் என 2 கெட்டப்புகளில் நடிக்கிறார். அப்பா விஜய் மீன் கடைக்காரராகவும், மகன் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடித்துள்ளனர். கால்பந்து விளையாட்டில் உள்ள அரசியலை வெளிச்சம்போட்டு காட்டி உள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட்டானது . தற்போது பிகில் படத்தின் ட்ரைலர் வரும் 12-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.