சென்னை, அக்.9: சீன அதிபருக்கு அளிக்கப்படும் விருந்தில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்வார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வரும் 11 மற்றும் 12 தேதிகளில் சீன அதிபர் ஜி ஜின்பிங்க் சென்னை வருகிறார். மாமல்லபுரத்தில் நடைபெறும் உச்சி மாநாட்டில் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

சீன அதிபரை கௌரவிக்கும் வகையில் பிரதமர் மோடி சிறப்பு விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் முக்கிய தலைவர்கள், அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். ஏற்கனவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு விருந்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதே போல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவர் விருந்தில் கலந்து கொள்வார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.