சென்னை, அக்.9: நடிகை லட்சுமி மேனனுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை அவர் திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

கும்கி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லட்சுமி மேனன். அதனை தொடர்ந்து சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, ஜிகர்தண்டா, பாண்டிய நாடு, றெக்க, வேதாளம், மஞ்சப்பை, கொம்பன், மிருதன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்தார்.

கடந்த சில மாதங்களாக சினிமாவில் நடிக்காமல் மீண்டும் படிக்கச்சென்ற லட்சுமி மேனன் கல்லூரி படிப்பை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு பெற்றோர் மாப்பிளை பார்த்துள்ளனர். லட்சுமி மேனனுக்கும் அந்த மாப்பிள்ளை பிடித்து விடவே திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு இறுதியில் அவர்களது திருமணம் நடைபெற உள்ளது. அதன் பின்பு நடிப்பு தொழிலுக்கு அவர் முழுக்கு போட உள்ளதாகவும் அவரது வீட்டார் கூறி உள்ளனர்.

அதற்குள் ஒரு சில படங்களில் லட்சுமி மேனன் நடித்து முடித்து விட திட்டம் வைத்துள்ளார்.