ஹாங்காங், அக்.9: ஹாங்காங்கில் ‘நைப் பிகைன்ட் பேக்’ என்ற தலைப்பில் வரையப்பட்ட சிறுமியின் ஓவியம் ரூ.177 கோடிக்கு ஏலம் போனது

ஹாங்காங்கில் ஓவியங்களின் ஏல விற்பனை நடைபெற்றது. இதில் ஜப்பானை சேர்ந்த பிரபல ஓவியர் யோஷிடோமா நாரா வரைந்த ‘நைப் பிகைன்ட் பேக்’ என்ற தலைப்பில் வரையப்பட்ட சிறுமியின் ஓவியம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

பெரிய கண்களுடன் முறைத்து பார்த்தபடி நிற்கும் சிறுமியின் ஒரு கை முதுகுபுறமாக மறைத்து வைத்திருப்பது போல ஓவியம் வரையப்பட்டிருந்தது. சிறுமி மறைத்து வைத்திருக்கும் கையில் என்ன வைத்திருப்பாள்? என்ற கேள்வியுடன் ஏலம் தொடங்கியது.

ஏலத்தில் 6 பேர் போட்டி போட்டுக் கொண்டு ஏலம் கேட்டனர். இறுதியில் அந்த ஓவியம் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.177 கோடிக்கு (25 மில்லியன் அமெரிக்க டாலர்) ஏலம் போனது. நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட 5 மடங்கு ஏலம் போனது.