ராமநாதபுரம், அக்.9: ராமநாதபுரத்தில் கடல்நீர் 200 மீட்டருக்கு மேல் உள்வாங்கி உள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்து உள்ளனர்.

ராமநாதபுரத்தில் உப்பூர் பகுதியில் கடல்நீர் 200 மீட்டருக்கு தூரத்துக்கு மேல் உள் வாங்கியுள்ளது. இதேபோன்று ராமேஸ்வரம் சங்குமால் கடற்பகுதியிலும் கடல்நீர் உள் வாங்கியுள்ளது என்று தெரிவித்து உள்ளனர்.

ராமேஸ்வரம் துறைமுக கடல் பகுதியில் கடந்த ஜூனில் பல அடி தூரம் கடல் உள்வாங்கியது. இந்நிலையில், 4 மாதங்களுக்கு பின் மீண்டும் அங்கு கடல்நீர் உள் வாங்கியுள்ள சம்பவம் நடந்துள்ளது.