புதுச்சேரி, அக்.9: உலக சாதனை படைத்த இரட்டையர் மற்றும் மாஸ்டருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள இன்டர்நேஷ்னல் வி.ஆர்.எஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அக்டமி இயக்குனர் மகாகுரு வி.ஆர்.எஸ் குமாரிடம் காரைக்கால் குட்ஷெப்பட் மேல்நிலை பள்ளியில் 5-ம் வகுப்பு பயிலும் இரட்டையர்களான கே.ஸ்ரீ விசாகன் (வயது 9) மற்றும் கே ஸ்ரீஹரிணி (வயது 9) ஆகியோர் மூன்று வயது முதல் கராத்தே, சிலம்பம், யோகா, கிக் பாக்ஸிங், குபுடோ, தேக்வாண்டோ போன்ற எண்னற்ற தற்காப்பு கலைகலை கற்று இந்தியா மற்றும் சர்வதேச அளவில் 200-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வாங்கி உள்ளனர்.

மேலும் புதுச்சேரி கவர்னர், முதல்வர் மற்றும் பல்வேறு தரப்பினரிடமும் பாராட்டை பெற்ற இவர்களின் சாதனையை சிறப்பிக்கும் விதமாக பள்ளியின் சார்பாக தயார் செய்யப்பட்ட புத்தகத்தை சமீபத்தில் புதுச்சேரி துணைநிலை கவர்னர் கிரண் பேடி வெளியிட்டார். இவர்களின் சாதனைகளை யுனிவர்சல் அச்சிவர்ஸ் புக் ஆப் ரிக்கார்ட்ஸ் மற்றும் பியூச்சர் கலாம்ஸ் புக் ஆப் ரிக்கார்ட்ஸ் ஆகியவை உலக சாதனையாக பதியப்பட்டது’. மேலும் ஸ்ரீ விசாகன் கண்களை கட்டிக் கொண்டு குறுகிய நேரத்தில் பல்வேறு தற்காப்பு கலைகளை செய்து காண்பித்ததும், கே ஸ்ரீஹரிணி குறுகிய நேரத்தில் பல்வேறு தற்காப்பு கலைகளின் ஆயுதத்தை பயன்படுத்தி தற்காப்பு கலைகளை செய்து காண்பித்ததும் இருவரும் புதிய உலக சாதனை செய்ததால் இவர்களுக்கு சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. மேலும் இருபத்தைந்து வருடங்களாக தற்காப்பு கலைகளில் சேவையாற்றி வரும் வி.ஆர்.எஸ் குமாருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சென்னை அண்ணாநகரில் நடந்த விழாவில் உலக சாதனைக்கான சான்றுகள் மற்றும் கௌரவ டாக்டர் பட்டத்துக்கான சான்றுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் டாக்டர் பாபு பாலகிருஷ்ணன், முதன்மை அலுவலர் செல்வம் உமா மற்றும்.பெற்றோர் மற்றும் பலர் இருந்தனர்,