புதிய அணு உலை தாங்கும் விட்டங்கள் நிறுவப்பட்டன

சென்னை

சென்னை, அக்.9: தமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் தொழில்நுட்ப பங்குதாரரான ரஷியாவின் ரொசாட்டம் ஸ்டேட் அட்டாமிக் எனர்ஜி கார்ப்பரேஷன், வங்கதேசத்தில் உருவாக்கி வரும் ரூப்பூர் அணுமின் ஆலையின் கட்டுமானத்தில் மற்றுமோர் மைல்கல் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. அலகு 1-ல் அணு உலையை தாங்கி நிற்கும் விட்டங்கள், கடந்த செப்டம்பர் 29-ம் தேதி வெற்றிகரமாக நிறுவப்பட்டன. இது குறித்து ரூப்பூர் அணுமின் ஆலை கட்டுமான திட்டத்தின் இயக்குநரும், ஆட்டம் ஸ்டோரி எக்ஸ்போர்ட் பிரிவின் துணைத் தலைவருமான செர்கி லஸ்டோசிக்கின் கூறுகையில், ரூப்பூர் அணுமின் ஆலையின் கட்டுமான பணியில் முக்கிய நிகழ்வான விட்டங்களை நிறுவும் பணி வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.

ரஷியாவின் ரொசாட்டம் ஸ்டேட் அட்டாமிக் எனர்ஜி கார்ப்பரேஷனின் பொறியியல் பிரிவான ஆட்டம் ஸ்டோரி எக்ஸ்போர்ட் வழிகாட்டுதலின்படி வடிவமைக்கப்பட்ட இந்த விட்டங்களை நிறுவும் பணி என்பது மிகவும் சிக்கலானது. அதிகபட்ச துல்லியம் இதனை செய்து முடிப்பதற்குத் தேவை. அந்தப் பணி தற்போது அட்டவணைப்படி செய்து முடிக்கப்பட்டுள்ளதற்கு தங்களது ஒருங்கிணைந்த பங்களிப்பை வழங்கிய பணியாளர்களுக்கும், கட்டுமான ஊழியர்களுக்கும் மனப்பூர்வமான நன்றி.என்று கூறினார்.