சென்னை, அக்.9: கேளம்பாக்கத்தில் வசிப்பவர் ஆறுமுகம். இவர், என்சிசி அதிகாரியாக உள்ளார். இவரது வீட்டில் நேற்றிரவு வெளிநாட்டை சேர்ந்த இருவர் வாடகைக்கு வீடு வேண்டும் என்று கேட்டுள்ளனர். இவரும், அடையாள அட்டை உள்ளிட் ஆவணங்களை காண்பிக்கும்படி கேட்டுள்ளார். ஆனால், அவர்களிடம் எந்த ஆவணங்களும் இல்லாததால் சந்தேகமடைந்த ஆறுமுகம், உடனடியாக கேளம்பாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவர்களிடம் விசாரிக்கையில் அவர்கள் நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், மதுரவாயல் போலீசில் இவர்கள் மீது கொள்ளை வழக்கு இருப்பதும் தெரியவந்தது. அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.