ஓடும் பேருந்தில் முதியவரிடம் ஒரு லட்சம் ரூபாய் அபேஸ்

குற்றம் சென்னை

சென்னை, அக்.9: பேருந்தில் பயணித்த முதியவரின் கைப்பையில் வைத்திருந்த ரூ.1லட்சம் ரொக்கப்பணம் மாயமானது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் தர்மன் (வயது 60). ஓய்வுபெற்ற தலைமையாசிரியரான இவர், சொந்த ஊரான அருப்புக்கோட்டைக்கு சென்றுவிட்டு தனியார் பஸ் மூலம் நேற்றிரவு கோயம்பேடு வந்தடைந்துள்ளார். பேருந்தில் இருந்து கீழே இறங்கி பார்த்தபோது, அவரது கைப்பையில் வைத்திருந்த ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

நெற்குன்றத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 26). இவர், சைக்கிளில் டீ வியாபாரம் செய்துவருகிறார்.நெற்குன்றம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள எடைமேடை அருகே இன்று அதிகாலை 3 மணியளவில் டீ வியாபாரம் செய்துக்கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த 2 பேர் அவரது பாக்கெட்டில் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோடினர். இதுகுறித்து, கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.