சென்னை, அக்.9: பிரதமர் மோடி சீனா அதிபர் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. அங்குள்ள பேருந்து நிலையம் மூடப்பட்டு இருக்கிறது. ஓஎம்ஆர் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு 11-ம் தேதி விடுமுறை விடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. வெள்ளி கிழமை மதியம் 1.30 மணிக்கு சென்னை வரும் ஜின்பிங் கிண்டி ஐடிசி ஓட்டலில் சிறிது நேரம் தங்கிவிட்டு சாலை வழியாக மாமல்லபுரம் செல்கிறார். அதே நேரத்தில் பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரத்திற்கு ஹெலிகாப்டரில் போகிறார்.

சீனா அதிபர் செல்லும் நேரத்தில் போக்குவரத்தில் மாற்றம் செய்வது குறித்து காவல் துறை தரப்பில் எதுவும் அறிவிக்கவில்லை. ஆனால் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் ஏற்பாடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனா அதிபர் வருகையை யொட்டி ஓஎம்ஆர், இசிஆர் உள்ள 50க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் இன்று ஒன்றுகூடி வெள்ளிக் கிழமை விடுமுறை விடுவது கூறித்து முடிவு எடுக்கிறார்கள். ஜின்பிங் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாமல்லபுரம் பேருந்து நிலைத்திற்குள் பஸ்கள் செல்லவில்லை. பூங்சேரி பஸ்நிலையத்துடன் பேருந்துக்கள் நிறுத்தப்படுகின்றன.

இங்கிருந்து 3 கி.மீ. நடந்துதான் மாமல்ல புரம் செல்ல வேண்டும். தமிழ்நாடு அரவு விரைவு பேருந்து கழகம் சார்பில் கோயம்பேட்டில் இருந்து புதுச்சேரிக்கு 144 பேருந்து சேவை நடைபெற்று வருகிறது. இதுதவிர தாம்பரம் செங்கல்பட்டில் இருந்து செல்லும் பேருந்துகளும் இசிஆர் வழியாக செல்கின்றன. பாதுகாப்பு ஏற்பாட்டை கருதி இந்த பேருந்துக்கள் ஓட்டல் கிராண்டு பே ஜங்சன் அருகே பயணிகளை இறக்கி விடுகின்றன. திருக்கழுக்குன்றம், திருப்போரூரில் இருந்து செல்லும் பேருந்துக்கள் பூஞ்சேரியுடன் நின்று விடுகின்றன. புஞ்சேரியில் தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பது குறித்து இன்று முடிவு எடுக்கிறார்கள்.

சீனா அதிபரின் பயண நாட்களான வெள்ளி மற்றும் சனி கிழமைகளில் இசிஆரில் பேருந்து சேவைகளை குறைப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் மாமல்லபுரம் பகுதியில் ஆட்டோ மற்றும் ஷேர்ஆட்டோ வழித்தடத்தை இசிஆரை தவிர்க்கும் வகையில் இன்று முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. சீனா அதிபர் பயணம் செய்யும் சாலை மார்க்கத்தில் 50க்கும் மேற்பட்ட பள்ளிகள், 20க்கும் அதிகமான கல்லூரில் மற்றும் ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ளன. பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் செல்வதால் பாதிப்பு ஏற்படாது என்றபோதிலும் சீனா அதிபர் சாலை மார்க்கமாகவே செல்கிறார். எனவே கல்வி நிறுவனங்களை திறந்து வைத்து போக்குவரத்து நெரிசல் அல்லது போக்குவரத்து மாற்றத்தால் தங்கள் குழந்தைகள் அவதிப்படுவதை பெற்றோர்கள் விரும்பவில்லை. இதுகுறித்து இன்று கல்வி நிறுவன நிர்வாகிகள் ஆலோசித்து விடுமுறை விடுவது குறித்து இன்று முடிவு எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.