சென்னை, அக்.9: விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 2 நாட்கள் பிரசாரம் செய்கிறார். விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. வேட்பாளர் மற்றும் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பிரசாரம் செய்கிறார். இன்று அவர் விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரம் செய்கிறார். மாலை 4.30 மணிக்கு பிரசாரத்தை தொடங்கும் அவர் நேமூர், பனமலை, கெடார், விக்கிரவாண்டி, ராதாபுரம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்து தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

வருகிற 12-ந்தேதி நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம் செய்கிறார். அன்று மாலை 4.30 மணிக்கு பிரசாரத்தை தொடங்கும் அவர் மூலக்கரைப்பட்டி, நாங்குநேரி, ஏர்வாடி, திருக்குறுங்குடி, களக்காடு ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார். காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரசை தாக்கி பேசி வந்த வைகோ நாங்குநேரியில் அக்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.