சென்னை, அக்.9: சீன பிரதமர் ஜி ஜின்பிங் சென்னை வருவதையொட்டி, தமிழகம் மற்றும் சென்னைக்கு வரும் அனைத்து ரெயில் நிலையங்களிலும் ரெயில்வே போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். சீன பிரதமரின் வருகையை எதிர்த்து திபெத்தியர்கள் போராட்டம் நடத்துவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதனிடையே, வட இந்தியாவில் இருந்து ரெயில்மூலம் திபெத்தியர்கள் சென்னைக்கு வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, வடமாநிலங்களில் இருந்து சென்னைக்கு மற்றும் சென்னை வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ரெயில்களில் ரெயில்வே போலீசார் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.