தாம்பரம் , அக்.9: கணவனின் முதல் மனைவிக்கு பிறந்த6வயது சிறுமி இடையூறாக இருந்தததால் 3வது மாடியிலிருந்து தள்ளி கொலை செய்து விட்டு மாயமானதாக நாடகமாடினேன் என்று கைது செய்யப்பட்ட சித்தி போலீசில் கூறியுள்ளார். தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம் ஏரிக்கரை, சக்கரபாணி தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பார்த்தீபன். (வயது36). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் சரண்யா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி ராகவி என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. உடல்நலம் சரியில்லாமல் 2முதல் மனைவி இறந்ததால் 2016ம் ஆண்டு சூரியகலா என்ற பெண்ணை பார்த்தீபன் 2ம் தாராமாக திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒன்னரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. முதல் மனைவிக்கு பிறந்த ராகவிக்கு தற்போது 6 வயதாகிறது.இவர் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை ராகவியை விட்டு விட்டு மாமியார் வளர்மதி உறவினர் வீட்டிற்குசென்றுவிட்டாராம்.

இந்தநிலையில் நேற்று கணவனுக்கு போன் செய்து ராகவியை காணவில்லை என்றுகூறியுள்ளார். மகளை காணாத துடித்த பார்த்தீபன் அக்கம்பக்கம் எல்லாம் தேடி பார்த்து விட்டு மாடிக்கு சென்றுபார்த்துபோது . புதரில் சிறுமி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அலறினார்.இதுகுறித்து தகவல் அறிந்த சேலையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். மேலும் சூரியகலாவை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:- எனது கணவனின் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தை என்பதால் எனக்கு பிடிக்க வில்லை. அவள் இடையூறாக இருந்தார். அதனால் மாமியார் ஊருக்கு சென்ற பின்னர் சாப்பாடு கொடுப்பதாக அழைத்துச்சென்று மாடியிலிருந்து தள்ளிவிட்டேன். அப்போது ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். பின்னர் ஒன்றும் தெரியாதது போல் கணவனுக்கு போன் செய்து சிறுமியை காணவில்லை என்று நாடகமாடினேன். ஆனால் போலீசார் கண்டுபிடித்து விட்டனர். இவ்வாறுஅவர் கூறினார்.