கார்த்தி நடிப்பில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ், விவேகானந்தா பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் கைதி. மாநகரம் படப்புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்த படத்திற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம்.சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கார்த்தியுடன் நரேன், ரமணா, மரியம் ஜார்ஜ் இணைந்து நடித்துள்ளனர். தீபாவளிக்கு வெளியாக இருக்கும் கைதி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் கார்த்தி பேசியதாவது:- உதவி இயக்குநராக இருக்கும்போது சில படங்கள் செய்யனும்னு நினைக்கிற மாதிரி படங்கள் நமக்கு எப்போதாவது தான் வந்து சேரும். அந்த மாதிரி தான் மெட்ராஸ், தீரன் இப்ப கைதி. ஒரு களத்தில போய் அந்தக் கேரக்டரை தெரிஞ்சிக்கிட்டு பண்ற படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த படத்தில் நிறைய சவால்கள் இருப்பது தெரிந்தும் அதை ஆசைப்பட்டு நடித்திருக்கிறேன்.

லோகேஷ் ரசிகருக்கு படம் எப்படி கொடுக்கனும்னு தெரிந்த டைரக்டர். இதில எந்த அளவு புதுசா பண்ண முடியுமோ பண்ணுங்கன்னு சொன்னேன். அத மொத்த டீமும் பண்ணியிருக்காங்க. முழுக்க முழுக்க நைட்ல ஷூட் பண்ணிருக்கோம். இதில நிறைய ஆக்ஷன் பண்ணிருக்கேன். இந்த படத்தில நரேன் கூட நடிச்சது சந்தோஷமான விஷயம். எப்போதும் வாழக்கையில எதை வேணாலும் பகிர்ந்து கொள்ளக்கூடிய நண்பர் அவர். இந்த படத்தில எல்லோரும் அவ்வளவு நேர்த்தியாக உழைச்சிருக்காங்க என்றார்.