திருவாரூர், அக்.10: கஜா புயல் பாதித்த அனைத்து கிராமங்களுக்கும் பாகுபாடின்றி பயிர் காப்பீடு வழங்கக்கோரி திருவாருர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் காவிரி பாசன விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர். திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களுக்கு பாகுபாடியின்றி பயிர் காப்பீடு வழங்க கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் பங்கேற்ற விவாசயிகள் சங்க பொதுச்செயலார் பிஆர் பாண்டியின் நிருகாவிரி டெல்டாவில் கடந்த ஆண்டு கஜாபுயல் தாக்குதலால் 1 கோடிக்கு மேல் தென்னை மரங்கள் அடியோடு அழிந்தது. சுமார் 10 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி நெல் பயிர்கள் 80%மகசூல் இழப்பு ஏற்பட்டது. தென்னைக்கு மட்டும் நிவாரணம் வழங்கிய நிலையில் நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டிற்கான இழப்பீடு அனைவருக்கும் பெற்று தர தமிழக அரசு உத்திரவாதமளித்தது.

தற்போது காப்பீட்டு நிறுவனம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 564 வருவாய் கிராமங்களில் 164 கிராமங்களுக்கு மட்டும் இழப்பீடு மறுக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. அனைத்து கிராமங்களுக்கும் பாகுபாடின்றி இழப்பீடு வழங்க வேண்டும் மேலும் சுமார் 400 வாருவாய் கிராமங்களுக்கு வரப் பெற்றுள்ள இழப்பீடு தொகையை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் ஒப்புதலின்றி பழைய கடனில் வரவு வைக்க நடவடிக்கை எடுத்து வருவது கண்டிக்கதக்கது. நிபந்தனையின்றி அனைவருக்கும் உடன் வழங்கிட வலியுறுத்துகிறேன்.

கூட்டுறவு வங்கிகள் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படாமல் காலம் கடத்தி வருவதால் சாகுபடி பணிகள் முடங்கி உள்ளது.எனவே கஜாபுயல் பாதித்த அனைத்து பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு 100சதம் பயிர்க்காப்பீட்டுத்தொகையை பெற்றுத்தர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.