முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் பி.வி.சிந்து

சென்னை

சென்னை, அக்.10: இறகுப்பந்து விளையாட்டு வீராங்கனை பி,வி,சிந்து முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை வழங்கினார் இறகுப்பந்தில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை பி.வி,சிந்து முகப்பேர் வேலம்மாள் பள்ளிக்கு மிகப்பிரம்மாண்டமான வரவேற்புகளுக்கிடையில் வருகை தந்திருந்தார். அவரது சாதனைகளைப் பெருமைப் படுத்தும் வகையில் வேலம்மாள் பள்ளி மிகப் பிரமாண்டமான பாராட்டு விழா நடத்தி அவரை கௌரவப்படுத்தியது.

மேலும் வேலம்மாள் நெக்லஸ் குழுமத்தைச் சேர்ந்த பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் தேசிய மற்றும் சர்வதேச சாதனை புரிந்த விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ரூபாய் 60 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உதவித்தொகையை வழங்கினார். மேலும் என்டிஎஸ்இ கல்விப்பிரிவில் சாதனை படைத்த மாணவர்களுக்கும் அவர் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

பின்னர் மாணவர்களுக்கு இடையே நிகழ்ந்த உரையாடலின் போது அவரது விளையாட்டின் மீதான விருப்பம் மற்றும் அர்ப்பணிப்பு. எதிர்கால லட்சியம் போன்றவை மாணவர்களை ஈர்க்கும் வகையில் அமைந்தது, மாணவர்களிடையே பேசிய பி,வி, சிந்து ஒவ்வொரு மாணவனும் தனக்குக் கிடைத்த வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்தி வெற்றியைத் தனதாக்கிக் கொள்ளப் பாடுபட வெண்டும் என்று கேட்டுக்கொ£ண்டார்.