நவீன தொழில்நுட்பத்தில் புதிய ஹீட்பாட்ஸ் ஹீட்டர்

சென்னை

சென்னை, அக்.11: உலகின் மிகப்பெரிய வாட்டர் ஹீட்டர் உற்பத்தி நிறுவனமும் மற்றும் இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரியவாட்டர் ஹீட்டர் பிராண்டுமான ஏ.ஓ. ஸ்மித் புதியஅம்சங்களுடன் ஹீட்பாட் வாட்டர் ஹீட்டரைஅறிமுகப்படுத்தியுள்ளது.  இது எதிர்காலத்திற்கு ஏற்ற அதி நவீன தொழில் நுட்பத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அதன் சிறந்த வடிவமைப்பைக் கொண்டு குளியலறைக்கு மெருகு சேர்த்துள்ளது. இது குறித்து ஏ.ஓ. ஸ்மித் இந்தியா,மேலாண்மை இயக்குனர் பராக் குல்கர்னி கூறியதாவது: மிகவும் நம்பிக்கைக்குரியவாட்டர் ஹீட்டர் பிராண்டுமான ஏ.ஓ. ஸ்மித் புதிய அம்சங்களுடன் ஹீட்பாட் வாட்டர் ஹீட்டரைஅறிமுகப்படுத்தியுள்ளது. “இந்தஅறிமுகம் குறித்து நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்.

இது,நுகர்வோர்களுக்கு வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தும் விதத்தில் ஒருபுதிய திருப்பத்தைக் கொடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் புத்தாக்கத்தில் ஒரு முன்னோடி மற்றும் வாட்டர் ஹீட்டர்கள் சந்தையில் முன்னணி வகிக்கும் நிறுவனம் என்ற வகையில், நுகர்வோர்கள் பயன்பெறுவதற்கு வழிகாட்டுதல் செய்வோம். நுகர்வோர்களை மனதில் கொண்டும் மற்றும் அவர்களுக்கு பயன்பாட்டில் முன் எப்போதும் இல்லாத அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்ற உத்தியைக் கொண்டும் ஹீட்பாட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது தரத்தில் சிறந்த தொழில் நுட்பம் மற்றும் அழகுறவும் கலந்து வெளிவந்துள்ளது. இந்த அறிமுகத்தின் மூலம், வாட்டர் ஹீட்டர் பிரிவின் நிலை உயர்த்தப்பட்டிருக்கிறது என்பது நிச்சயம்,” இவ்வாறு அவர் கூறினார்.