சென்னை, அக்.11: கிண்டி ஓட்டலில் சீன அதிபர் ஜின் பிங் தங்குவதையொட்டி, அங்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஜின் பிங் தங்கும் அறை, அந்த அறை இருக்கும் மாடியில் முதல் அடுக்கு பாதுகாப்பு மொத்தமும் சீன அதிபரின் தனி பாதுகாப்பு படையின் வசம் உள்ளது. இதே போல அந்த மாடிக்கு செல்லும் வழியில் 2-ம் அடுக்கு பாதுகாப்பு உள்ளது.

3-வதாக முதல் தளத்திற்கு செல்லும் வழியில் மத்திய சிறப்பு பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார். 4-வதாக ஓட்டலில் கீழ் தளத்தில் தமிழக அதிவிரைவு படையினர் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள்.

ஓட்டலில் கீழ் தளம், வாயிலில் தமிழக போலீசார் 5 -வது அடுக்கு பாதுகாப்பிலும், வெளி நுழைவு வாயிலில் 6-வது, ஓட்டலின் சுற்றுச் சுவரை சுற்றிலும் சென்னை போலீசார் 7 வது அடுக்கு பாதுகாப்பிலும் ஈடுபடுகிறார்கள்.