சென்னை, அக்.11: சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகம் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றது என பிரதமர் மோடி தமிழிலேயே பாராட்டு தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை வந்த உடனேயே தமது டுவிட்டர் பக்கத்தில் தமிழ் மொழியில் வெளியிட்ட செய்திகளில் கூறியிருப்பதாவது:-சீன அதிபருக்கு சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் சாலையில் வழி நெடுக கலை நிகழ்ச்சிகளுடன் பொதுமக்களும், மாணவர்களும் அனைத்து கட்சியினரும் ஒன்றுகூடி உற்சாகமாக வரவேற்பு அளித்ததை பிரதமர் சுட்டிக்காட்டி உள்ளார்.