பிள்ளைகளை அடித்து வளர்த்தால் ‘பிழை’ நடக்காது

சினிமா

தாமோதரன் தயாரிக்க ராஜவேல் கிருஷ்ணா இயக்கி உள்ள படம் ‘பிழை’. இதில் சார்லி, மைம்கோபி, ஜார்ஜ் மரியான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரித்தில் நடிக்கின்றனர். கல்லூரி பட புகழ் வினோத் ஆகியோருடன் காக்கா முட்டை புகழ் ரமேஸ், அப்பா படத்தில் நடித்த நசாத், ஜீ தமிழ் ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற கோகுல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர்.

படம் குறித்து இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா கூறுகையில், முன்பெல்லாம், பிள்ளைகளை கண்டித்து, அடித்து வளர்ப்பர், ஆசிரியர்களிடம், கண்களை மட்டும் விட்டுவிட்டு, தோலை உரியுங்கள் என்றே, பெற்றோர் கூறுவர், இப்போது பிள்ளைகளை அடிப்பதே குற்றம் என்றாகிவிட்டது. இதனால் இளம் தலைமுறை தறிகெட்டு திரிகிறது. இப்படிப்பட்ட 3 சிறுவர்கள், வீட்டை விட்டு வெளியேறி எப்படியெல்லாம் துன்பப்படுகின்றனர் என்பதே கதை என்றார்.