சமீபத்தில் வெளியான ‘மான்ஸ்டர்’ வெற்றிப் படத்தை தொடர்ந்து எஸ்ஜே சூர்யா. இயக்குநர் ராதாமோகனுடன் இணைந்துள்ளார். ராதாமோகன் இயக்கும் இந்த புதிய படத்தினை ஏஞ்ஜல்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரித்து, நடிக்கிறார்எஸ்ஜே சூர்யா. குடும்பங்கள் ரசிக்கும் பல தரமான வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்த இயக்குனர் ராதா மோகன், முற்றிலும் புதிய பாணியில் காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக இந்தப் படத்தை இயக்கப் போகிறார். சமீப காலமாக மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் எஸ் ஜே சூர்யா, முதல் முறையாக இயக்குனர் ராதா மோகனுடன் இணைந்து இப்படத்திலும் ஒரு மாறுபட்ட பாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் வி நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில், கடந்த 9-ம் தேதி படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
தற்போது எஸ் ஜே சூர்யா ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் ‘இரவாக்காலம்‘ மற்றும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படங்கள் தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளன எனபது குறிப்பிடத்தக்கது.