விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரித்துள்ள படம் ‘சங்கத்தமிழன்’. விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தை இயக்குனர் விஜய் சந்தர் இயக்கியுள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளனர். மேலும் நாசர், சூரி, ஸ்ரீமன், ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய், ஸ்ரீ ரஞ்ஜனி மற்றும் மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளனர்.

விவேக்-மெர்வின் ஆகியோர் இசைமைப்பில் பாடல்கள் ஹிட் ஆனா இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. வரும் தீபாவளி பண்டிகைக்கு படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், படத்திற்கு சரியான தியேட்டர்கள் கிடைக்காததால் தீபாவளி அன்று ரிலீஸ் இல்லை என படத்தின் தமிழக உரிமையை வாங்கிய லிப்ரா புரோடக்ஷன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.