மாமல்லபுரம், அக்.12: சீன அதிபர் ஜி ஜின் பிங்குக்கு அவர் உருவம் பொறித்த பட்டுப் சால்வையை பிரதமர் மோடி பரிசளித்தார். இருநாட்டு தலைவர்கள், அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நிறைவு பெற்ற பின்னர் ஹோட்டலில் அமைந்துள்ள தமிழக கைவினைபொருட்கள் தயாரிக்கும் விற்பனை கூடத்தை சீன அதிபர் – பிரதமர் மோடி ஆகியோர் பார்வையிட்டனர். பழங்கால சிலை, நடராஜர் சிலைகளை, பஞ்சவர்ண குத்து விளக்கு, ஆளுயர விளக்கு அவை எதற்காக பயன்படுத்தப்படுகிறது போன்றவற்றை பிரதமர் மோடி, சீன அதிபருக்கு விளக்கினார்.

இதை தொடர்ந்து பட்டு நெசவு தறி மூலம் தயாரிக்கப்படும் காஞ்சிபுரம் பட்டுச்சேலை கண்டு வியந்த சீன அதிபருக்கு, எவ்வாறு சேலை நெய்யப்படுகிறது என மோடி விளக்கி கூறினார். அதை தொடர்ந்து மோடி சீன அதிபர்களின் முகங்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டுப்புடவைகளை இருவரும் பார்த்து ரசித்தனர். சிறுமுகையால் சீனஅதிபர் முகம் பொறிக்கப்பட்ட சால்வை மோடி ஷி ஜின்பிங்கு பரிசாக வழங்கினார். அப்போது அந்த சால்வை முன்பு இருவரும் கை குலுக்கியவாரு புகைப்படம் எடுத்து கொண்டனர். தமிழகத்தின் பாரம்பரிய பொருட்கள் பார்வையிட்ட பின்னர் சீன அதிபர் ஷி ஜின்பிங்கு பிரதமர் மோடி மதிய உணவு விருந்து அளித்தார்.