மாமல்லபுரம், அக்.12: இன்று காலை ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் இருந்து பிரதமர் மோடியை சந்திக்க காலை 9.40 மணியளவில் சீன அதிபர் புறப்பட்டு கோவளம் சென்றார். அவர் செல்லும் வழியில் பல இடங்களில் கலை நிகழ்ச்சிகள் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் மாணவர்கள் என இந்தியா – சீனா தேசிய கொடிகளை ஏந்தி வரவேற்றனர். 30 நிமிட பயணத்திற்கு பிறகு காலை 10.10 மணியளவில் கோவளம் தாஜ் பிஷர்மேன் கோவ் ஓட்டலுக்கு வந்தடைந்த சீன அதிபரை பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார். அங்கிருந்து பேட்டரி கார் மூலம் தாஜ் ஹோட்டலில் உள்ள பசுமை வழி சாலையில் பயணம் மேற்கொண்டு, பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்தை 10.18 மணியளவில் வந்தடைந்தனர்.