திருவள்ளூர், அக். 12: ‘டார்லிங்’ குழுமத்தின் புதிய விற்பனை நிலையம் திருவள்ளூரில் துவக்கப்பட்டது. ‘டார்லிங்’ குழுமத்தின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மொபைல் பிரிவுகளின் 73-வது விற்பனை நிலையம் தி சென்னை சில்க்ஸ், திருவள்ளூர் கிளையின் இரண்டாவது தளத்தில் மிகவும் கோலாகலமாக துவக்கப்பட்டது. இந்த விற்பனை பிரிவை தி சென்னை சில்க்சின் நிர்வாக இயக்குனர் கே.மாணிக்கம் ரிப்பன் கத்தரித்தும், எம்.பழனியம்மாள் குத்து விளக்கேற்றியும் துவக்கி வைத்தார்கள். முதல் விற்பனையை டார்லிங் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் எம்.வெங்கட சுப்பு தொடங்கி வைத்தார்.