புதுச்சேரி, அக். 12: புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் மணவெளி சேர்ந்தவர் வடிவேலு ஏற்கனவே இறந்துவிட்டார் இவருடைய மனைவி குணசுந்தரி (வயது 45). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை பாகூர் அருகே உள்ள கரையம்புத்தூரில் உள்ளது.நேற்று 8 பெண்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்தனர். மதியம் 3 மணிஅளவில் ஆலையில்தீவிபத்து ஏற்பட்டது.

இதில் ஆலையின் உரிமையாளர் குணசுந்தரி கிருஷ்ணாபுரத்தில் சேர்ந்த கன்னியப்பன் வைத்தீஸ்வரி (வயது 27 )கரையாம்புத்தூர் சின்னசாமி, மாலை விழுப்புரம் சொந்த ஊரை சேர்ந்த பிரபு மனைவி தீபா (வயது 35) கரையம்புத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்ரமன் என்பவரது மனைவி (வரலட்சுமி வயது 44) ஆகிய 5 பேரும் பட்டாசு தயாரிப்பு வேலைகள் ஈடுபட்டிருந்தபோது இதில் பட்டாசுகள் வெடித்தது அதே இடத்தில் தீபா, வரலட்சுமி ஆகியோர் உடல் சிதறி கிடந்தனர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டவர்கள் வைத்தீஸ்வரி, கலாமணி, சுகுண, சுந்தரி என்பது தெரியவந்து. இவர்களில் வைத்தீஸ்வரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார் . இது குறித்து புதுவை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.