சென்னை, அக்.12: சீன அதிபருக்கு மாமல்லபுரம் கடற்கரை பகுதியிலேயே இரவு விருந்தினை பிரதமர் நரேந்திர மோடி அளித்தார். இந்த விருந்துக்கான சமையல் நேற்று பிற்பகலில் தொடங்கியது. அப்போது, அந்த கடற்கரை பகுதியே சமையல் மணம் அப்பகுதி முழுவதும் பரவியதாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் தெரிவித்தனர்.

இரவு விருந்தில் முற்றிலும் தென்னிந்திய, அதிலும் தமிழகத்தின் உணவு வகைகளே இருந்தன. குறிப்பாக, தக்காளி ரசம், கையால் அரைத்த மசாலாவில் தயாரிக்கப்பட்ட சாம்பார், கடலை குருமா, கவினி அரிசி அல்வா என தமிழகம் சார்ந்த 200 வகையான உணவுப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு பரிமாறப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.