ஆம்புலன்சில் உயிர்காப்பு மருந்து அவசியம்: கலெக்டர்

தமிழ்நாடு

புதுச்சேரி, அக்.12: புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது சாலை பாதுகாப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை பிறப்பித்துள்ளது. புதுவையில் தொடர்ந்து சாலை பாதுகாப்பு குழு தலைவரும் மாவட்ட கலெக்டரும் அணை அருண் தலைமையில் ஏற்கனவே நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படியும் பொதுமக்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி எளிதில் கிடைப்பது மற்றும் போதுமான வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ்கள் இயக்குவது பற்றி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன,

இருப்பினும் பல ஆம்புலன்ஸ்கள் நோயாளிகள் தேவைகளை பூர்த்தி செய்ய குறைந்தபட்ச வசதிகள் கூட இல்லாமல் இயக்கப்படுகின்றன. இதுபோன்ற ஆம்புலன்ஸ்கள் சாலையில் செல்ல அனுமதித்தால் நோயாளிகளை கொண்டு செல்லும் போது பல மரணங்கள் நடைபெறும் எனவே போக்கும்.இவ்வாறு அவர் கூறினார். மேலும் ஆம்புலன்ஸ்களில் அவசர சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவர் மற்றும் மருத்துவ ஊழியர்களும் அவசியம் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.