சென்னை, அக்.12: சர்வதேச நாடாளுமன்ற யூனியன் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக திமுக எம்.பி. கனிமொழி செர்பியா நாட்டுக்கு சென்றுள்ளார். மத்திய மற்றும் தென் கிழக்கு ஐரோப் பாவில் அமைந்துள்ள சிறிய நாடான செர்பியாவில் இன்று முதல் 18-ந் தேதி வரை நாடாளுமன்ற யூனியன் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்தியாவில் இருந்து கனிமொழி, சசிதரூர், வன்சுக் சியாம், கிருபா இக்பால், ராம்குமார் வர்மா உள்ளிட்ட 6 எம்.பி,க்கள் சென்றுள்ளனர் மக்களவை சபாநாயகர் ஓம்,பிர்லா கடந்த வாரம் உகாண்டாவில் நடைபெற்ற சர்வதேச நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்று விட்டு அண்மையில் திரும்பியுள்ளார்.