சென்னை, அக்.12: ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ள தேனீர் விடுதியில் வேலை பார்த்துவருபவர் முகமது ரபீக் (வயது 26). இவர், நேற்று பகல் சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்துள்ளார். அப்போது, எதிரே வந்த இருவர், முகமது ரபீக்கின் சட்டைப் பாக்கெட்டில் வைத்திருந்த பணத்தை பறித்து கொண்டு தப்பியோடியுள்ளனர். முகமது ரபீக்கின் சத்தம் கேட்டு திரண்ட பொதுமக்கள், தப்பியோடிய கொள்ளையர்களை விரட்டி பிடித்து ராயப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் இருவரை போலீசார் கைது செய்து நடத்திய விசாரணையில், டெல்லியை சேர்ந்த தஸ்தகீர் (வயது 24), முகமது நதிம் (வயது 20) என்பது தெரியவந்தது.