சென்னை, அக்.12: கொடுங்கையூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் எடையுள்ள செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனர். சென்னை கொடுஞ்கையூரில் உள்ள மரக்கடையில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக மகா கவி பாரதியார் நகர் காவல் நிலைய உதவி கமிஷனருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில், இன்று அதிகாலை 5 மணியளவில் இன்ஸ்பெக்டர் மில்லர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டனர்.  அப்போது, ஒரு டன் எடையுடைய செம்மரக்கட்டைகள் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, கொடுங்கையூரை சேர்ந்த அசாரூதின், ஷகில் (வயது 30) ஜெயக்குமார் (வயது 24), சேது (வயது 19), புருஷோத்தமன் (வயது 21) ஆகிய 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.  கைப்பற்றப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ. 6 லட்சம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.