லக்னோ, அக்.14: நாட்டின் முதல் தனியார் ரெயில் டெல்லி- லக்னோ இடையே ஓடத் தொடங்கி உள்ளது. இதில் சதாப்தி எக்ஸ்பிரசை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ரெயில்வேயில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட தனியார்மயம் டெல்லியில் செயல்படுத்தப்பட்டு விட்டது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து டெல்லி வழித்தடத்தில் இந்த தனியார் ரெயில் அக்டோபர் முதல் வாரத்தில் கொடி அசைத்து துவக்கி வைக்கப்பட்டது. இதில் சதாப்தி எக்ஸ்பிரசை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், இது 1998-ல் இயற்றப்பட்ட ரெயில்வே சட்ட விதிகளுக்கு முரணானது என்றும் ஐஆர்சிடிசி அதிகாரிகள் கூறி உள்ளனர். இந்த விதிகளின் படி ரெயில்வே கட்டணங்களை மத்திய அரசு தான் நிர்ணயிக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக தனியார்களே கட்டணங்களை நிர்ணயிப்பது ஏற்க முடியாதது என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே அடுத்த 2-வது ரெயில் மும்பை-அகமதாபாத் இடையே விரைவில் ஓடத்தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.. படிப்படியாக 150 ரெயில்கள் தனியார் மயமாக்கப்படும் என்று கூறப்படுகிறது. இது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில் முதல் தனியார் ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போதுள்ள ரெயில்களில் இருப்பதை விட உலக தரத்தில் அதிக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கட்டணம்அதிகமாக இருக்கிறது என்று புகார் கூறப்படுகிறது. பயண நேரம் குறைவாக இருப்பதால் கட்டணத்தை குறைப்பது சிரமமான விஷயம் தான் என்றார். தற்போது டெல்லி- லக்னோ இடையே செல்லும் தேஜா எக்ஸ்பிரஸ் 6.30 நிமிடத்தில் 511 கிலோமீட்டர் தொலைவை கடந்து விடுகிறது. இதில் ஏசி முதல் வகுப்பு கட்டணம் 2450 ஏசி சேர் கார் கட்டணம் 1565 இதே சமயம் டெல்லி- லக்னோ இடை« செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முதல் வகுப்புக்கு 1855 ஏசி காருக்கு 1165-ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.