புனிதர் மரியம் திரேசியாவுக்கு மோடி பாராட்டு

உலகம்

வாடிகன், அக்.14: கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்த்ரி மரியம் திரேசியா மனித குல நன்மைக்காக உழைத்து முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார் என பிரதமர் மோடி மான்கிபாத் நிகழ்ச்சியில் பேசிய போது பாராட்டு தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த கன்னியாஸ்திரியான இவர் நோய்களை குணமாக்குதல் உள்ளிட்ட அற்புதங்களை நிகழ்த்திஉள்ளார். அயராத இறைப்பணி ஆற்றி அற்புதங்கள் நிகழ்த்திய இவருக்கு வாடிகன் நகரில் கத்தோலிக்க கிறிஸ்தவ மததலைவர் போப்பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கினார். மான்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் பேசிய போது, அவர் மனித குலத்திற்காக பணியாற்றியதை பாராட்டினார்.