டெங்கு காய்ச்சல் பாதிப்பு: இளம்பெண் உயிரிழப்பு

தமிழ்நாடு

திருத்தணி, அக்.14: திருத்தணியில் டெங்கு காய்ச்சலால் இளம்பெண் பலியானார். 4 நாட்களில் 3பேர் பலியான சம்பவம் அந்தபகுதி மக்களிடையே பெரும்அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:- திருத்தணி அடுத்த அருங்குளம் கிராமத்தை சேர்ந்த சங்கீதா (வயது21) இவருக்கு கடந்த 5ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டு திருவள்ளுர் தலைமை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அந்த பெண்ணுக்கு டெங்கு அறிகுறி தெரிய வரவே மருத்துவர்கள் சென்னை அரசு மருத்துவ மனைக்கு கடந்த 7ந் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றானர்.ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சங்கீதா உயிரிழந்தார்.

இறந்த சங்கீதாவிற்கும் அதே கிராமத்தை சேர்ந்த வேலு என்பவருக்கும் கடந்த 1 ஆண்டுக்கு முன் தான் திருமணம் நடந்தது. தற்போது 6 மாதத்தில் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த கிராமமே தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளது.
இதேபோல் கடந்த 4 நாட்களுக்கு முன்பு லோகேஸ்வரி, மற்றம் மருதவல்லிபுரம் கிராமத்தை சேர்ந்த நடராஜன் மகன் நிஷாந்த்(வயது11) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் அந்தபகுதியில் திறந்த நிலையில் உள்ள கால்வாய்கள் உள்ளதால் அதிலிருந்து கொசு உற்பத்தி யாகி பகல் கொசுத்தொல்லையால் அவதிப்பட்டு வருவதாகவும் கால்வாய்க்கு மூடி அமைக்ககோரி பல முறை அரசுக்குகோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. கொசுக்களின் உற்பத்தியால் மர்ம காய்ச்சல் ஏற்பட்டு டெங்கு பரவி உயிரிழப்பு அதிகரித்து வருவதாவல் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.