2 எம் சினிமாஸ் சார்பில் கே.வி. சபரிஷ் தயாரித்துள்ள படம் காவியன். ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கதையின் நாயகனாக முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் சாம் நடிக்கிறார். மனம் கொத்திப் பறவை படத்தில் அறிமுகமான அத்மையா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் ஸ்ரீதேவிகுமாரும் மற்றொரு ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார். முக்கியக் கதாப்பாத்திரத்தில் ஸ்ரீநாத் நடிக்க, ஹாலிவுட்டில் இருந்து ஜெஸ்டின் விகாஷ், லூக்கஸ், ஜெனிபர் ஆகிய நடிகர்களும் படத்தில் பங்கேற்கிறார்கள்.

விறுவிறுப்பான இக்கதையை அழகான திரைக்கதையாக்கி இயக்கி இருப்பவர் சாரதி. ஒளிப்பதிவு மூலம் படத்தில் தனிக்கவனம் செலுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் என்.எஸ். ராஜேஷ்குமார். அதிரடி இசையை ஸ்யாம் மோகன் வழங்க, எடிட்டராக அருண்தாமஸ் கிரி பணியாற்றியுள்ளார். இப்படம் இம்மாதம் 18-ம் தேதி வெளியாக இருக்கிறது.