சென்னை, அக்.15: பிகில் படத்தை தடை விதிக்க கோரிய வழக்கில், படதயாரிப்பு மற்றும் அட்லீ தரப்பில் வழக்கு தொடர்பான ஆவணங்களை நாளை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது என்றும் கால் பந்தாட்டத்தை மையமாக 256 பக்கங்கள் கொண்ட கதையை தான் தயார் செய்து தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து, சில படத்தயாரிப்பு நிறுவனங்களிடம் கதை சொல்லி இருந்தாகவும், இயக்குனர் செல்வா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் பிகில் படத்திற்கு தடை விதிக்க கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய படத்தயாரிப்பு நிறுவனம் மற்றும் அட்லீ க்கு உத்தரவிட்டு விசாரணையை நாளை தள்ளி வைத்தார்