மொஹாலி, அக்.15:  ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், அஸ்வின் தலைமையில் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கடந்த 2 ஆண்டுகளாக லீக் சுற்றோடு வெளியேறியது.

இதனால், பஞ்சாப் அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும், அஸ்வினை, டெல்லி அணி வாங்கி இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள, இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான அனில்கும்ப்ளே அளித்த ஆலோசனையின்படி, அஸ்வினை பஞ்சாப் அணியே தக்க வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாம்.

இது குறித்து, பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் நெஸ் வாடியா கூறுகையில், அஸ்வினை, டெல்லி அணிக்கு நாங்கள் மாற்றவில்லை. முதலில் நாங்கள் எடுத்த முடிவை தற்போது மறுபரிசீலனை செய்துள்ளோம். அவர் பஞ்சாப் அணியிலேயே தொடர்வார், என்றார்.