மும்பை, அக்.15: ரூ.90 லட்சத்தை எடுக்க முடியாமல் உயிரிழந்த பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர் ஒருவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டு பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட பிஎம்சி வங்கியில் சுமார் 21 ஆயிரம் போலி கணக்குகள் மூலமாக 4,355 கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.

வங்கி மோசடி குறித்த விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு ரூ.25,000 வரை மட்டுமே பணம் எடுக்க முடியும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

மும்பையைச் சேர்ந்த ஜெட் ஏர்வேசின் முன்னாள் ஊழியர் சஞ்சய் குலாட்டி, பி.எம்.சி. வங்கிக்கு எதிரான நேற்றைய போராட்டத்தில் பங்கேற்றார். போராட்டத்தை முடித்து விட்டு வீடு திரும்புகையில் மாரடைப்பால் அவர் உயிரிழந்தார்.